Sunday, 1 February 2009

ஈழக் குரல் உலகக் குரலாக


ஈழதமிழர்களுக்கான உரிமைக் குரல் உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் மாயாவின் தொலைகாட்சி பேட்டி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமி விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் ஒச்கார் விருதுக்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இவ் வேளையில் இப் பேட்டியை வழங்கியுள்ளார்.

மாதங்கி மாயா அருள்பிரகாசம் ஹன்ச்லோ, லண்டனில் கலா, அருள் பிரகாசம் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார். அவரது ஆறாவது வயதில் மீண்டும் தாய் நாடான தமிழீழத்துக்கு திரும்பயது மாயா குடும்பம். அப்போதைய அரசியல் சூழ்னிலையில் அருளர் எனும் பெயருடன் மாயாவினுடைய தகப்பனார் ஈரோச்(EROS) அமைப்பினை உருவாக்கியவர்களுள் ஒருவரானார். அதன் பின்னர் இலங்கை இராணுவத்தின் அடக்குமுறையின் காரணத்தினால் அருளர் ஒழித்து வாழ்வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பல இடங்களிலும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக மீண்டும் ஐக்கிய இராச்சியத்துக்கு அகதியாக திரும்பிய மாயா Central Saint Martins College of Art and Design தனது பட்டப்படிப்பை முடித்தார். தற்போது நியூ யோர்க்கில் தனது கணவரான பெஞ்யமின் புரூவருடன் வசிக்கும் இவர் தனது முதலாவது குழந்தையை எதிர்பாத்துக்கொண்டிருக்கிறார். இவரது கணவரும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயாவின் பேட்டியைப் பார்க்க.