முத்து நீ எங்கள் சொத்து
எம் மண்ணின் வாசனை முகரவில்லை
எம் மக்களுடன் நீ உறவாடவில்லை
இருந்தும்
உன் உயிரை கொடையாக்கினாய்
எமக்காக
எம் விடிவுக்காக
சட்டக் கல்லூரி மாணவர்
சாகும் வரை உண்ணாது
இருந்தும்
சட்டை செய்யவில்லை எம்மை
சகலரும்
நெருப்பை நீ
உன் மீது வைக்கவில்லை
எல்லோர் மனங்களிலும்
எரியவிட்டுள்ளாய்
கவிதை வாசித்துக் கொண்டு
வெருமனே இருப்பவரானாலும் சரி
தொப்புள் கொடி உறவா
எம் மக்கள் படும் வேதனையா
எது உன்னைத் தூண்டியது
இந்த முடிவை எடுக்க
பெற்றோரை விட்டு உற்றோரை விட்டு
உன் சேய் நாட்டுக்காக
உன் உயிரைக் கொடுத்த நீ
சாதரண மனிதன் அல்ல
உண்மையிலேயே நீ
எங்களுக்கு கிடைத்த முத்து
இனி நீயும் எங்களில்
ஒருவன்
உனக்கும் எங்கள் மனம்
மாவீரர் நாளில்
புகழ் பாடும்
பூ சொரியும்
உனக்கு எங்களின்
வீர வணக்கங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment